எழுதியவர் சு. வெங்கடேசன்
குலக் குடிகளாக ஒவ்வொரு குடிகளுக்கும் ஒரு தலைவன் இருந்தது மாறி சேர, சோழ, பாண்டிய அரசாட்சி உருவான சமயம். பறம்பு நாடு ஒரு குல குடிகளுக்கு என்று மட்டுமே இல்லாமல் மற்ற குடிகளையும் அரவணைக்கும் தன்மை கொண்டது. இதன் தலைவன் பாரி. வேளிர்குலத் தலைவன். பெரும் புலவர் கபிலரும் பறம்பு நாட்டைப் பற்றி அறிய அங்கு செல்வதை கதை நெடுகிலும் காணலாம். பறம்பில் போர் மேகம் சூழ்கிறது. போருக்கான விதை பாண்டிய மன்னரின் மகன் திருமணத்திற்காக பறம்பு நாட்டை ஒட்டிய வேங்கல் நாட்டின் சிற்றரசன் மையூர்கிழார் தனது மகனிடம் கொடுத்தனுப்பிய பரிசு பொருளில் இருந்து தொடங்குகிறது. அந்தப் பரிசுப் பொருள் பறம்பு நாட்டின் தெய்வ வாக்கு விலங்கு.
தெய்வ வாக்கு விலங்கு பற்றி பறம்பு மக்கள் மற்றும் ஒரு சில பாணர்கள் (பாட்டு பாடி பரிசு பெறுபவர்கள்) தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெய்வ வாக்கு விலங்கு குறி சொல்வதை பொருத்தே ஒவ்வொரு குல குடிகளும் கொற்றவை கூத்து நடத்துவர். விலங்கு குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே தங்கும், இதனை பாதுகாக்க பாரி தனி படைப்பிரிவு வைத்திருந்தான். இவ்விலங்கின் இயல்பு எப்போதும் வட திசை பார்த்து அமர்வது. நாளடைவில் இதுவே தேவாங்கு என்று அழைக்கப்படுகிறது.
தெய்வ வாக்கு விலங்கு வட திசை பார்த்து அமர்வதால் வணிகத்திற்கு உதவும் என பாண்டியனுக்கு தெரியவருகிறது. இதனால் பாண்டியன் திரையர்ரை பயன்படுத்தி பறம்பின் தெய்வ வாக்கு விலங்கை கைப்பற்ற முயல்கிறான். திரையர் யார் என்றால் பறம்பு நாட்டின் இரத்த உறவுகள். பாண்டியனுக்கு எதிரான போரில் தோல்வியுற்று சிறைபிடிக்கப்பட்டவர்கள். இவ்விலங்கை பறம்பில் இருந்து கொண்டு வந்தால் தங்களை விடுவிப்பதாக வாக்களித்திருந்தான் பாண்டியன்.
திரையரின் தலைவன் காடம்பன் தலைமையில் தெய்வ வாக்கு விலங்கை தேடி படையோடு பறம்புக்கு வருகின்றனர். பறம்பின் ஆசான் தேக்கன் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி அறிந்து தானே அவர்களுக்கு தெய்வ வாக்கு விலங்கை அளிக்கிறான், தான் கொல்வித்த திரையர்களுக்கு நிகராக தனது வீரர்களை அனுப்புகிறான் பாரி.
பாண்டியன் திரையர்களை விடுவிப்பதற்கு பதில், தெய்வ வாக்கு விலங்குடன் திரையர்களை, வணிகர்களுக்கு பரிசாக அளிக்கிறான். பாண்டியனின் மகன் வணிக குலத் தலைவனின் மகளை திருமணம் செய்ய இருப்பது குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து தெய்வ வாக்கு விலங்கு மற்றும் திரையர்களுக்காக பாரி அனுப்பிய வீரர்கள் எதிர்த்து நிற்க போர் மூழ்கிறது
இரண்டாம் போரில் கொல்லிக்காட்டு விதை மற்றும் பாழி நகருக்காக சேர, சோழ மற்றும் காடர்கள் இணைந்து பாரியின் பறம்புக்கு எதிராக போர் புரிகிறார்கள். இப்போரில் பறம்பின் கையை ஓங்குகிறது.
பறம்பிற்கு வெளியே சமவெளியில் நடக்கும் மூன்றாம் போரில் சேர, சோழ, பாண்டிய இணையை பாரி எதிர்கொள்கிறான். பறம்பின் ஆசான் மற்றும் முடியன் இருக்கும் வரை பறம்பின் தலைவன் பறம்பின் எல்லை தாண்டி செல்லக்கூடாது. போர் நாளிகை (நேரம்) முடிந்தபின் சூழ்ச்சியால் ராவதன்( வில்வித்தை தலைவன்) கொல்லப்பட. பறம்பின் ஆசான் தலைவன் பாரியை களமிறக்கும் பொருட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறான். இதனைத் தொடர்ந்து பாரி போரில் இணைகிறான். இதுவே சமவெளியில் பாரியின் முதல் போர்.
-gmjonish