உலகில் இருக்கும் போட்டித் தேர்வுகளில் மிகப் பழமையானதும், அதிக போட்டி நிறைந்ததுமான தேர்வு “இந்திய குடிமை பணி தேர்வு”. ஆங்கிலேயர் ஆட்சி தொட்டு இருந்து வருகிறது. 1854ஆம் ஆண்டு லார்ட் மெக்காலேவின் பரிந்துரைப்படி, ஆங்கிலேய அரசு குடிமை பணிக்கு, போட்டித்தேர்வு முறையை நடைமுறைப்படுத்தியது. அதுவரை தங்களுக்கு விருப்பமான நபர்களையே அரசு நியமித்து வந்தது. சுதந்திரத்துக்கு பின் இத்தேர்வை இந்தியாவின் “இந்திய குடிமை பணியாளர் தேர்வாணையம்” நடத்தி வருகிறது. இத்தேர்வாணையம் நடத்தும் வேறு தேர்வுகள்,
- இந்திய வனப்பணி தேர்வு (IFS)
- தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு (NDA)
- ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு (CDS)
- மத்திய ஆயுத காவல் படை தேர்வு (CAPF – Assistant Commandant)
- பொறியியல் பணி தேர்வு
- ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு
- ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணி தேர்வு
- இந்திய பொருளாதாரப் பணி தேர்வு
- இந்திய புள்ளியியல் பணி தேர்வு
தேர்வாணையம் நடத்தும் மேற்கண்ட தேர்வுகளில் இந்திய குடிமை பணி தேர்வு முதன்மையான
இத்தேர்வுக்கு இருக்கும் முக்கியத்துவத்தால், அதிகமானோர் தேர்வுக்கு தயாரிக்கின்றனர், போட்டியும் அதிக அளவில் இருந்து வருகிறது. இத்தேர்வானது குறைந்த வயதிலேயே ஒரு பெரும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பை கொடுக்கிறது. மாவட்ட ஆட்சியாளராக, காவல் ஆணையராக, உலக நாடுகளில் இந்தியாவின் முகமாக இருக்கும் அரசு தூதுவராக செயல்பட வாய்ப்பளிக்கிறது. மேலும் இந்திய நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாக செயல்படுபவர்கள் இவர்கள். 1947ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் நாள் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளிடம் உரையாற்றும்போது சர்தார் வல்லபாய் பட்டேல் இதனையை குறிப்பிட்டார். அன்றைய தினம் ஏப்ரல் 21, தேசிய குடிமை பணி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த தேர்வு அதிகப்போட்டி நிறைந்ததே தவிர கடினமான தேர்வு அன்று. சராசரி மாணவர்கள் தங்கள் கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடியில் கல்வி கற்றவனும் சரி, கிராமபுரத்தில் பயின்றவனும் சரி கடினமாக கற்றால் மட்டுமே வெற்றி என்ற இலக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்தையும் பற்றிய பொதுவான அறிவை மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது இத்தேர்வு.
பாடத்திட்டம் & வடிவமைப்பு
தேர்வு மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். முதன்மை தேர்வை நம் விருப்ப மொழியில் எழுதலாம். நேர்காணலில் பேச நம் விருப்பமொழியை தேர்ந்தெடுக்கலாம். நேர்காணல் புதுடில்லியில் நடக்கும்
முதல்நிலை தேர்வு
தாள் Paper 1 Paper 2
பெயர் General Studies CSAT
நேரம் 2 மணி 2 மணி
வினாக்கள் 100 80
மதிப்பெண் 200 200
Negative Mark 0.66 (1/3 Mark) 0.83 (1/3 Mark)
Type Merit Eligibility (33% Mark)
Question MCQ MCQ
Syllabus
Paper 1 – History, Geography, Arts & Culture, Society, Polity, Governance, Social Justice, International Relations, Economics, Environment, Science & Technology, Security
Paper 2 – Comprehension, Interpersonal Skills, Logical Reasoning & Analytical Ability, Decision Making & Problem Solving, General Mental Ability, Basic Numeracy, Data Interpretation
முதன்மை தேர்வு
முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் இறுதி தேர்வு பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். முதன்மை தேர்வு மொத்தம் 9 தாள்களை கொண்டது. அதில் 2 தாள்கள் தகுதி தாள், மீதமுள்ள 7 தாள்கள் மதிப்பெண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரு தாளுக்கு 250 மதிப்பெண் விகிதம் 7 தாளுக்கு மொத்தம் 1750 மதிப்பெண்களை கொண்டது.
Eligibility Paper
Paper 1 Language (Tamil)
Paper 2 English
Merit Paper
Essay General Topic
General Studies I History, Geography, Arts & Culture, Society
General Studies II Polity, Governance, Social Justice, Intl Relations
General Studies III Economics, Environment, Sci & Tech, Security
General Studies IV Ethics
Optional I
Optional II
நேர்காணல்
நேர்காணல் 275 மதிப்பெண்களைக் கொண்டது. முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் சேர்த்து மொத்தமாக 2025 மதிப்பெண்ணுக்கு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். கடந்த முறை 2022 ஆம் ஆண்டு இந்திய அளவில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 960/2025.
-Monish